/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ரூ.2 கோடி மதிப்பில் 5 புதிய பஸ்கள்
/
ரூ.2 கோடி மதிப்பில் 5 புதிய பஸ்கள்
ADDED : ஆக 10, 2025 09:26 PM
ஊட்டி; ஊட்டி அரசு போக்குவரத்து கழகம் சார்பில், 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 5 புதிய பஸ்கள் இயக்கப்பட்டது.
போக்குவரத்து துறை சார்பில் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படும் பழைய பஸ்களுக்கு மாற்றாக புதிய பஸ்களை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி, ஊட்டி அரசு போக்குவரத்து கழக பணிமனையிலிருந்து புதிய பஸ்கள் இயக்கும் நிகழ்ச்சி நடந்தது. அரசு தலைமை கொறடா ராமசந்தினர் பங்கேற்று புதிய பஸ்களின் இயக்கத்தை துவக்கி வைத்தார். இதில், 'கோத்தகிரியிலிருந்து, ஊட்டி வழியாக மைசூரு; மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டி வழியாக மைசூரு,' என, ஐந்து வழித்தடத்திற்கு புதிய பஸ்கள் இயக்கப்பட்டன.
அரசு தலைமை கொறடா ராமசந்திரன் கூறுகையில்,''நீலகிரியை பொறுத்த வரை அனைத்து வழித்தடத்திற்கு பழைய பஸ்களுக்கு மாற்றாக புதிய பஸ்கள் படிப்படியாக இயக்கப்பட்டு வருகிறது. தற்போது, 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 5 புதிய பஸ்கள் இயக்கப்பட்டுள்ளது,'' என்றார்.