ADDED : ஆக 20, 2026 06:32 PM
அ நிறம் | அளவு
பாலக்காடு: பாலக்காடு அருகே, ரிசார்ட் நீச்சல் குளத்தில் தவறி விழுந்த, 5 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.
கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம், கொடுங்கல்லூரை சேர்ந்தவர் பினாப் என்பவரின் மகன் ரிஹான் அகமது, 5, பினாப் குடும்பத்தினருடன் பாலக்காடு மாவட்டம் கோட்டாயி பகுதியில் உள்ள தனியார் ரிசார்ட்டில் தங்கினர். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, 4:00 மணிக்கு, ரிசார்ட் வளாகத்தில் விளையாடி கொண்டிருந்த ரிஹான் அகமது, எதிர்பாராதவிதமாக கால் தவறி நீச்சல் குளத்தில் விழுந்துள்ளார்.
இதை கண்ட குடும்பத்தினர், உடனடியாக சிறுவனை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த மருத்துவர்கள், சிறுவன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து கோட்டாயி போலீசார் விசாரிக்கின்றனர்.
