/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கூடலுார் வனத்தில் 500 கி.மீ., தீ தடுப்பு கோடுகள்
/
கூடலுார் வனத்தில் 500 கி.மீ., தீ தடுப்பு கோடுகள்
ADDED : பிப் 22, 2024 11:32 PM

கூடலூர்:கூடலூர் வனக்கோட்டத்தில், வனத்தீ பரவலை தடுக்க, 500 கி.மீ., தூரம் தீ தடுப்பு கோடுகள் அமைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
கூடலூர் வனக்கோட்டத்தில், கடந்த ஆண்டு எதிர்பார்த்த அளவு மழை பெய்யவில்லை. தொடர்ந்து, பனி பொழிவு ஏற்பட்டதால் சில இடங்களில் வனத்தீ ஏற்பட்டது. வன ஊழியர்கள், மேற்கொண்ட நடவடிக்கையால், தீ பரவல் தடுக்கப்பட்டு வருகிறது.
வனத்தீ ஏற்பட்டால், அவை வனப்பகுதிக்குள் பரவுவதை தடுக்கும் வகையில், கூடலூர் வனக்கோட்டத்தில் 500 கி.மீ., தூரம் தீ தடுப்பு கோடுகள் அமைக்கும் பணிகளை வனத்துறையினர் துவங்கியுள்ளனர்.
வனத்துறையினர் கூறுகையில், 'கடந்தாண்டு பருவமழை பொய்த்ததால், கோடைக்கு முன்பாக வனத்தீ அபாயம் உள்ளது. வனத்தீ ஏற்படுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வனத்தீ ஏற்பட்டால் அதனை கட்டுப்படுத்தவும், தீ பரவுவதை தடுக்கவும், 500 கி.மீ., துாரத்திற்கு தீ தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டு வருகிறது. வனத்தீ ஏற்படுவதை தடுக்க பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும்.' என்றனர்.