/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மத்திய கூட்டுறவு வங்கியின் 71 வது பொது பேரவை கூட்டம்
/
மத்திய கூட்டுறவு வங்கியின் 71 வது பொது பேரவை கூட்டம்
மத்திய கூட்டுறவு வங்கியின் 71 வது பொது பேரவை கூட்டம்
மத்திய கூட்டுறவு வங்கியின் 71 வது பொது பேரவை கூட்டம்
ADDED : செப் 22, 2024 11:34 PM
ஊட்டி : நீலகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின், 71 வது பொது பேரவை கூட்டம் வங்கி வளாகத்தில் நடந்தது.
நீலகிரி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தயாளன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார்.
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் துணைப்பதிவாளர் அய்யனார், ஆண்டறிக்கை மற்றும் பொது பேரவை தீர்மானங்களை வாசித்தார்.
கூட்டத்தில், 2024- 25 ஆண்டிற்கான உத்தேச வரவு செலவுகள், தொடக்க கூட்டுறவு சங்கங்களுக்கு, வங்கி உறுப்பினர் உதவி திட்டத்தின் கீழ் வழங்கிய, 45.32 லட்சம் ரூபாய் நிதி உதவி மற்றும் மத்திய கூட்டுறவு வங்கி நவீனமயமாக்கும் பணிக்கான செலவினங்களுக்கு ஒப்புதல் பெறப்பட்டன.
கூட்டத்தில், மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு பண்டகங்கள், கூட்டுறவு நகர வங்கிகள், கூட்டுறவு விற்பனை சங்கம், தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள், தொடக்க கூட்டுறவு பண்டகங்கள், மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் மேலாண்மை இயக்குனர்கள், செயலாட்சியர்கள் பங்கேற்றனர்.
வங்கி பொது மேலாளர் வெற்றி வேலன் வரவேற்றார். உதவி பொது மேலாளர் சுரேஷ் நன்றி கூறினார்.