/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தாயுமானவர் திட்டத்தில் 79 ஆயிரம் பேர் பயன்; மாவட்ட வழங்கல் துறை தகவல்

ADDED : டிச 15, 2025 06:06 AM
ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில், 323 முழு நேர நியாய விலை கடைகளும், 92 பகுதி நேர நியாய விலை கடைகளும் இயங்கி வருகின்றன.
அதில், 'முழுநேர நியாய விலை கடைகள் வாயிலாக, 2,02,515 குடும்ப அட்டைதாரர்களும், பகுதி நேர நியாய விலைக்கடைகள் வாயிலாக, 16,382,' என, மொத்தம் 2,18,897 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர்.
இவர்களுக்கு மாதந்தோறும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மட்டுமே கொண்ட குடும்பத்தினருக்கு, வீடுகளுக்கே சென்று அத்தியாவசிய பொருட்களை வினியோகம் செய்யும் வகையில் தாயுமானவர் சிறப்பு திட்டம் தொடங்கப்பட்டது.
79 ஆயிரம் பேர் பயன் தாயுமானவர் திட்டத்தின் கீழ், 'நீலகிரியில், ஆக., மாதத்தில்,70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், 18,286 குடும்ப அட்டைதாரர்கள்; செப்., மாதத்தில், 18,286 குடும்ப அட்டைதாரர்கள்; அக்., மாதத்தில்,21,449 குடும்ப அட்டைதாரர்கள்; நவ., மாதத்தில், 21,449 குடும்ப அட்டைதாரர்களும்,' என, மொத்தம், 79,470 மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்கள் அத்தியாவசிய பொருட்கள் பெற்று பயனடைந்து வருகின்றனர்.