/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஜாதிவாரி கணக்கெடுப்பு தேவை; ராமதாஸ் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்
/
ஜாதிவாரி கணக்கெடுப்பு தேவை; ராமதாஸ் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்
ஜாதிவாரி கணக்கெடுப்பு தேவை; ராமதாஸ் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்
ஜாதிவாரி கணக்கெடுப்பு தேவை; ராமதாஸ் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 15, 2025 06:06 AM
ஊட்டி: ஜாதிவாரி கணக்கெடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊட்டி கலெக்டர் அலுவலகம் எதிரில், பா.ம.க., ராமதாஸ் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட செயலாளர் சதீஷ் தலைமை வகித்தார். மாவட்ட அமைப்பு செயலாளர் ஜான் லியோ முன்னிலையில் வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பின் அவசியம் குறித்து, கோஷம் எழுப்பப்பட்டது.
மாநில துணைத்தலைவர் தங்கவேல் பாண்டியன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசுகையில், 'கடந்த, 1980 முதல், ராமதாஸ் தொடர்ந்து போராடியதால், மாநிலத் தில் நான்கு, தேசிய அளவில் இரண்டு இட ஒதுக்கீடுகள் கிடைத்தன. வன்னியர்கள் உட்பட, 108 ஜாதிகளுக்கு இட ஒதுக்கீடு கிடைத்தன. குறிப்பாக, அருந்ததியினருக்கு மூன்று சதவீதம் இட ஒதுக்கீடு கிடைத்தது. இதே போல, வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதுடன், ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவது அவசியம்,'என்றார்.
இதில், மாவட்ட தலைவர் விக்னேஷ், துணைத் தலைவர் இப்ராஹிம், துணை செயலாளர் மோகன் மற்றும் தொழிற்சங்க தலைவர் ராஜேஷ் உட்பட, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, பலர் பங்கேற்றனர்.

