/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கூடலூர் வனக்கோட்ட வனச்சரகர்கள் 8 பேர் இடமாற்றம்
/
கூடலூர் வனக்கோட்ட வனச்சரகர்கள் 8 பேர் இடமாற்றம்
ADDED : ஜூன் 09, 2025 09:34 PM
கூடலூர்; கூடலூர் வனக்கோட்டங்களில் பணியாற்றி வந்த 8 வனச்சரகர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
முதுமலை புலிகள் காப்பகம், கார்குடி வனச்சரகத்தில் பணியாற்றி வந்த விஜய், திருச்சி கோட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். முதுமலை வனச்சரகர் பாரத், நெலாக்கோட்டை வனச்சரகர் கணேசன் ஆகியோர் விழுப்புரம் வனக் கோட்டத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மசினகுடி கோட்டம் மசினகுடி வனச்சரகர் பாலாஜி, கார்குடிக்கு மாற்றப்பட்டுள்ளார். சீகூர் வனச்சரகர் தயானந்தன் கோவைக்கு மாற்றப்பட்டுள்ளார். சென்னையில் பணியாற்றி வந்த சுரேஷ்பாபு சீகூர் வனச்சரகத்தில் பொறுப்பேற்றுள்ளார். நீலகிரி கிழக்கு வனச்சரகர் தீனதயாளன் தேனிக்கு மாற்றப்பட்டுள்ளார். தேனியில் பணியாற்றி வந்த வெங்கடேஷ் நீலகிரி கிழக்கு வனச்சரகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கூடலூர் வனக்கோட்டம் ஓவேலி வனச்சரகர் சுரேஷ்குமார், திண்டுக்கல் கோட்டத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். நாடுகாணி வனச்சரகர் வீரமணி ஓவேலிக்கு மாற்றப்பட்டுள்ளார். ஓசூரில் பணியாற்றி வந்த வனச்சரகர் ரவி, நாடுகாணிக்கு மாற்றப்பட்டுள்ளார். இடம் மாற்றம் காரணமாக காலியாக உள்ள முதுமலை, நெலாக்கோட்டை, மசினகுடி வனச்சரகங்களுக்கு புதிய வனச்சரகர்கள் நியமிக்க வலியுறுத்தியுள்ளனர்.