/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
செல்லாண்டியம்மன் கோவிலில் 92வது ஆண்டு திருவிழா
/
செல்லாண்டியம்மன் கோவிலில் 92வது ஆண்டு திருவிழா
ADDED : ஜூன் 30, 2025 10:11 PM

குன்னுார்; குன்னுார் வெலிங்டன் லுார்துபுரம், செல்லாண்டி அம்மன் கோவிலில், 92 வது ஆண்டு விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது.
கடந்த மாதம், 27ல், காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் விழா துவங்கியது. அதில், அருவங்காடு அருகே உள்ள கருப்பராயர் கோவிலில் இருந்து, விரதம் இருந்த பக்தர்களின் கரக ஊர்வலம், அம்மன் தேர் பவனி ஆகியவை நடந்தன.
தொடர்ந்து, மாவிளக்கு பூஜை கஞ்சிவார்த்தல் இடம்பெற்றது. விரதம் இருந்த பக்தர்கள் பூகுண்டம் இறங்கி நேர்த்தி கடன் செலுத்தினர். நேற்று மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. இன்று கருப்பராயருக்கு எண்ணெய், பால் வார்த்தல் நிகழ்ச்சி, மதுரை வீரன் பூஜை, நாளை (2ம் தேதி) காட்டேரி அம்மன் கோவிலில் விசேஷ பூஜை நடக்கின்றன.
ஏற்பாடுகளை கோவில் பூசாரிகள் ஹரி, ஆனந்த் மற்றும் கோவில் நிர்வாக குழுவினர், ஊர் மக்கள், இளைஞர் குழுவினர், செல்லாண்டியம்மன் மகளிர் குழுவினர் செய்து வருகின்றனர்.