/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
9 மாதங்களில் 97.14 கோடி கிலோ தேயிலை உற்பத்தி
/
9 மாதங்களில் 97.14 கோடி கிலோ தேயிலை உற்பத்தி
ADDED : நவ 20, 2025 02:27 AM
குன்னுார்: கடந்த ஆண்டை விட நடப்பாண்டு, 9 மாதங்களில் நாட்டில், 97.14 கோடி கிலோ தேயிலை தூள் உற்பத்தியான நிலையில், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு, 5.26 கோடி கிலோ உற்பத்தி உயர்ந்தது.
குன்னுார் மற்றும் மேற்கு வங்கம் கொல்கத்தாவில் செயல்பட்டு வரும், இந்திய தேயிலை வாரிய புள்ளி விபரத்தின் அடிப்படையில், நாடு முழுவதும், கடந்த ஆண்டு முதல், 9 மாதங்களில், 91.88 கோடி கிலோ உற்பத்தியானது. நடப்பாண்டு இதே மாதங்களில், 97.14 கோடி கிலோ தேயிலை உற்பத்தி இருந்தது. 5.26 கோடி கிலோ உற்பத்தி அதிகரித்தது.
வட மாநிலங்களில் கடந்த ஆண்டு, 75.44 கோடி கிலோ உற்பத்தியான நிலையில், நடப்பாண்டு, 79.68 கோடி கிலோ என இருந்தது. 4.24 கோடி கிலோ உற்பத்தி உயர்ந்தது.
தென் மாநிலங்களில், கடந்த ஆண்டு, 16.44 கோடி கிலோவாக இருந்த நிலையில், 17.46 கோடி கிலோ அதிகரித்தது. நாட்டின் தேயிலை உற்பத்தி கணிசமாக உயர்ந்து வரும் சூழ்நிலையில், மொத்த உற்பத்தி, கடந்த ஆண்டைவிட, 5.7 சதவீதம் அதிகமாகியுள்ளது.
தென்னிந்திய தோட்ட அதிபர்கள் சங்க (உபாசி) செயலாளர் சஞ்சித் கூறுகையில், ''கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், நடப்பாண்டுகளில், 9 மாதங்களில் தேயிலை உற்பத்தி அதிகரித்தது. கடந்த, 2023ஐ விட கடந்த ஆண்டு தேயிலை உற்பத்தி வீழ்ச்சியை சந்தித்தது. நடப்பாண்டு சீரான காலநிலை உள்ளதால், பசுந்தேயிலை மகசூல் மற்றும் உற்பத்தி பழைய நிலைக்கு திரும்பியது,'' என்றார்.

