/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பூர்த்தியான விண்ணப்பங்களை திரும்ப பெறுவதில்... தொடரும் சிக்கல்! மூன்று தொகுதிகளில் பணி முழுமை பெறுவதில் திணறல்
/
பூர்த்தியான விண்ணப்பங்களை திரும்ப பெறுவதில்... தொடரும் சிக்கல்! மூன்று தொகுதிகளில் பணி முழுமை பெறுவதில் திணறல்
பூர்த்தியான விண்ணப்பங்களை திரும்ப பெறுவதில்... தொடரும் சிக்கல்! மூன்று தொகுதிகளில் பணி முழுமை பெறுவதில் திணறல்
பூர்த்தியான விண்ணப்பங்களை திரும்ப பெறுவதில்... தொடரும் சிக்கல்! மூன்று தொகுதிகளில் பணி முழுமை பெறுவதில் திணறல்
ADDED : நவ 19, 2025 05:18 AM

ஊட்டி: நீலகிரியில் தீவிர வாக்காளர் திருத்த படிவ வினியோகம் நிறைவடைந்த நிலையில், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில், ஊட்டி, குன்னுார், கூடலுார் சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஊட்டி தொகுதியில், 94,581 ஆண் வாக்காளர்கள்; 1,03,813 பெண் வாக்காளர்கள், 11 மூன்றாம் பாலினத்தவர் என, மொத்தம், 1,98,405 வாக்காளர்கள் உள்ளனர்.
கூடலுார் தொகுதியில், 94,582 ஆண் வாக்காளர்கள், 1,00,727 பெண் வாக்காளர்கள், 3 மூன்றாம் பாலினத்தவர் என, மொத்தம், 1,95,312 வாக்காளர்கள் உள்ளனர். குன்னுார் தொகுதியில், 90,038 ஆண் வாக்காளர்கள், 1,00,501 பெண் வாக்காளர்கள், 4 மூன்றாம் பாலினத்தவர் என, மொத்தம், 1,90,543 வாக்காளர்கள் உள்ளனர். மொத்தமுள்ள மூன்று தொகுதிகளில், 2,79,201 ஆண் வாக்காளர்கள், 3,05,041 பெண் வாக்காளர்கள், 18 மூன்றாம் பாலினத்தவர் என, மொத்தம், 5,84,260 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
படிவங்கள் வினியோகம் மூன்று தொகுதிகளில், நியமிக்கப்பட்டுள்ள ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்கள் வாயிலாக வாக்காளர் கணக்கீட்டு படிவங்கள் வழங்கும் பணிகள், 95 சதவீதம் நிறைவடைந்துள்ளது. பெற்றுக்கொண்ட வாக்காளர்கள், படிவங்களை பூர்த்தி செய்து ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்கள் வ சம் ஒப்படைத்து வருகின்ற னர். இதில், வீடு மாறி சென்றவர்கள், தொகுதி விட்டு தொகுதி மாறி சென்றவர்கள், மாவட்டம் விட்டு மாவட்டம் மாறி சென்றவர்களை போனில் தொடர்பு கொண்டு, அவர்களது விருப்பத்தின் பேரில் ஓட்டு போட வசதி செய்யப்படவுள்ளது.
காலமானவர்கள், நிரந்தரமாக குடிபெயர்ந்தவர்கள், வேறு மாநிலத்திற்கும், அயல் நாடுகளுக்கும் சென்றவர்களின் பெயரை நீக்குவது தொடர்பாக, தேர்தல் கமிஷனின் அறிவுறுத்தலின்படி, மாவட்ட தேர்தல் அலுவலர் முடிவெடுக்க உள்ளனர்.
நீலகிரியில் உள்ள மூன்று தொகுதிகளில் இதுவரை, 85 சதவீத வாக்காளர்களுக்கு, வாக்காளர் கணக்கீட்டு படிவங்கள் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள, 5 சதவீத வாக்காளர்களுக்கு, படிவங்களை வழங்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள் ளது. தேர்தல் அதிகாரிகள் கூறிகையில், 'மாவட்டத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த கணக்கெடுப்பு பணிகள் வேகமாக நடந்து வருகிறது.
நிரந்தரமாக பூட்டப்பட்ட வீடுகள், வெளிநாடுகளுக்கு, வேறு மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்து நிரந்தரமாக சென்றவர்களின் வீடுகளுக்கு, இரண்டாவது முறை நேரில் சென்று விசாரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மூன்றாவது முறை இறுதியாக நேரில் விசாரித்து, அதன் பின்பே இறுதி முடிவு எடுக்கப்படும். வாக்காளர்கள் படிவங்கள் வினியோகம் நிறைவடைந்துள்ள நிலையில், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது,' என்றனர்.
பி.எல்.ஓ.,க்கள் புலம்பல்! ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்கள் கூறுகையில், 'பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை பெற சம்மந்தப்பட்ட வீடுகளுக்கு செல்லும் போது, சிலர் படிவங்களை பூர்த்தி செய்யாமல் அப்படியே வைத்துள்ளனர்.
மழை, கடும் குளிர் என, மாறுப்பட்ட காலநிலை நிலவுவதால் பல்வேறு சிரமத்திற்கு இடையே சென்று வருவதால் பணிகள் குறிப்பிட்ட நேரத்துக்கு முடிவதில்லை. மலை மாவட்டத்தை பொறுத்தவரை நிர்ணயிக்கப்பட்ட நாட்களுக்குள் முடிக்க முடியுமா என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
பல இடங்களில் ஆன்லைனில் பதிவு செய்து விட்டதாக கூறிவிடுகின்றனர். இதனால் குழப்பம் ஏற்பட்டுள்ளது,' என்றனர்.

