/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கிராமத்தில் புகுந்த கரடி கோவில் கதவை உடைக்க முயற்சி
/
கிராமத்தில் புகுந்த கரடி கோவில் கதவை உடைக்க முயற்சி
கிராமத்தில் புகுந்த கரடி கோவில் கதவை உடைக்க முயற்சி
கிராமத்தில் புகுந்த கரடி கோவில் கதவை உடைக்க முயற்சி
ADDED : பிப் 22, 2024 06:29 AM
குன்னுார்: குன்னுார் கேத்தொரை அருகே தேனலை கிராமத்தில் அதிகாலை புகுந்த கரடியால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
குன்னுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கரடி உட்பட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. கோவில்களில் உள்ள எண்ணெய் மற்றும் ரேஷன் கடைகளில் உள்ள அரிசி, பருப்பு, பாமாயில் உட்கொள்ள கதவுகளை கரடி உடைத்து வருகிறது.
இந்நிலையில், குன்னுார் கேத்தி கேத்தொரை அருகே உள்ள தேனலை கிராமத்தில் நேற்று முன்தினம் அதிகாலை கரடி புகுந்தது. இப்பகுதியில் உள்ள அம்மன் கோவிலின் கதவை உடைக்க முயற்சி செய்துள்ளது. எனினும் இரும்பு தடுப்புகள் இருந்ததால் உடைக்க முடியவில்லை. அப்பகுதி மக்கள் சப்தமிட்டதால் அங்கிருந்து சென்றது. தகவலின் பேரில் வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு கண்காணிக்கின்றனர். இந்த சம்பவத்தால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.