/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ராணுவ பயிற்சி கல்லுாரிக்கு விசிட் செய்த கரடி
/
ராணுவ பயிற்சி கல்லுாரிக்கு விசிட் செய்த கரடி
ADDED : மார் 01, 2024 09:56 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னுார்:குன்னுார் ராணுவ பயிற்சி கல்லுாரி வளாகத்திற்குள் 'கரடி' விசிட் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னுார் பகுதிகளில் கரடிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில் அவ்வப்போது உணவுகளை தேடி குடியிருப்பு பகுதிகளுக்கும் வந்து செல்கிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை, பல்வேறு நாடுகளை சேர்ந்த முப்படை அதிகாரிகள் பயிற்சி பெறும் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லுாரி வளாகத்திற்குள் புகுந்த கரடி 'ஹாயாக' நடந்து சென்றது.
அங்கு பணியில் இருந்த இரவு காவலர்கள் வீடியோ எடுத்தனர். தற்போது, இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

