ADDED : நவ 20, 2024 10:06 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னுார் ; குன்னுார், ஐ.டி.ஐ., சாலையில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது.
குன்னுார் ஐ.டி.ஐ., சாலையில் மெயின் குடிநீர் குழாய் உட்பட பல்வேறு வீடுகளுக்கு செல்லும் குடிநீர் குழாய்கள் உள்ளன. இங்கு பல ஆண்டுகளாக மெயின் குழாய் உடைந்து குடிநீர் வீணாகி சென்றதை, முன்னாள் மாவட்ட கலெக்டர் அருணா உத்தரவின் பேரில், நகராட்சி சரி செய்தது.
இந்நிலையில், இதன் அருகில் மற்றொரு குழாய் உடைந்து தற்போது குடிநீர் வீணாகி வருகிறது. சாலையும் சேதமடைந்து வருகிறது. எனவே, நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து, குடிநீர் வீணாவதை உடனடியாக தடுக்க வேண்டும்.

