/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
திறப்பு விழா நடந்தும் வாடகைக்கு விடப்படாத வணிக வளாகம்
/
திறப்பு விழா நடந்தும் வாடகைக்கு விடப்படாத வணிக வளாகம்
திறப்பு விழா நடந்தும் வாடகைக்கு விடப்படாத வணிக வளாகம்
திறப்பு விழா நடந்தும் வாடகைக்கு விடப்படாத வணிக வளாகம்
ADDED : ஜன 18, 2024 01:25 AM

அன்னுார் : பேரூராட்சி சார்பில், கட்டப்பட்ட கடைகள், வாடகைக்கு விடப்படாததால், மாதம் 10 லட்சம் ரூபாய் பேரூராட்சிக்கு இழப்பு ஏற்படுகிறது.
அன்னுார் பேரூராட்சிக்கு, சொந்தமான வார சந்தை வளாகத்தில், 5 கோடியே 50 லட்சம் ரூபாயில், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஐந்து கொட்டகைகள் மற்றும் 56 கடைகள் கட்டும் பணி துவங்கியது. இப்பணி முடிவடைந்து ஐந்து மாதங்கள் ஆகிவிட்டது.
ஓதிமலை ரோட்டில் (மாநில நெடுஞ்சாலை) தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில் 40 கடைகள் உள்ளன. வார சந்தை வளாகத்தில் 16 கடைகள் கட்டப்பட்டுள்ளன. இந்த வளாகத்தை கடந்த மாதம் கோவை வந்த முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார். திறப்பு விழா நடந்தும் ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது. அதன் பிறகும் கடைகள் இன்னும் வாடகைக்கு விடப்படவில்லை,
இதுகுறித்து அன்னுார் மக்கள் கூறுகையில்,' தற்போது ஓதிமலை சாலையில் தரைத்தளத்தில் கடைகள் 20 ஆயிரம் ரூபாய்க்கும், முதல் தளத்தில் பத்தாயிரம் ரூபாய்க்கும் வாடைக்கு விடப்படுகிறது.
சந்தைக்கு உள்ளே குறைந்தபட்சம் 6 ஆயிரம் முதல் பத்தாயிரம் ரூபாய் வரை வாடகைக்கு கடைகள் விடப்படுகின்றன. இந்நிலையில் கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் முதல்வரால் திறக்கப்பட்டு ஒரு மாதத்திற்கு மேலாகியும் கடைகளை வாடகைக்கு விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. உடனடியாக பொது ஏல முறையில், யார் அதிக வாடகைக்கு கடைகளை கேட்கின்றனரோ, அவர்களுக்கு வெளிப்படையாக கடைகளை ஏலம் விட வேண்டும். திறப்பு விழாவுக்கு பிறகும் மூடிக் கிடப்பதால் மாதம் 10 லட்சம் ரூபாய் பேரூராட்சிக்கு இழப்பு ஏற்பட்டு வருகிறது,' என்றனர்.
பேரூராட்சி தலைவர் பரமேஸ்வரன் கூறுகையில், 'பொது ஏலத்தில் கடைகளை வாடகைக்கு விடுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் வாடகைக்கு விடப்படும்,' என்றார்.