தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/சாலையோரம் 'கான்கிரீட்' தளம் அவசியம்

சாலையோரம் 'கான்கிரீட்' தளம் அவசியம்

சாலையோரம் 'கான்கிரீட்' தளம் அவசியம்


UPDATED : நவ 23, 2026 06:24 PM

ADDED : நவ 23, 2026 06:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 23, 2026 06:24 PM ADDED : நவ 23, 2026 06:24 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோத்தகிரி:

கோத்தகிரி –குன்னுார் சாலை மிக நேர்த்தியாக சீரமைக்கப்பட்டுள்ளது.

தேவையான இடங்களில் சாலை அகலப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், வாகனங்கள் எவ்வித இடையூறும் இல்லாமல் சென்று வருகின்றன. ஆனால், கட்டபெட்டு - நடுஹட்டி இடையே, சைக்கிள் பாலம் பகுதியில், சாலை வளைவு விரிவுப்படுத்தப்பட்ட இடத்தில், கான்கிரீட் தளம் அமைக்கப்படவில்லை.

குறிப்பிட்ட இடத்தில், கட்டுமான பொருட்கள் கொண்டு வரும் கனரக வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. தவிர, இங்கு மரங்கள் அகற்றப்படாமல் உள்ளன.

இதனால், எதிரில் வரும் வாகனங்கள் தெரியாமலும், ஒதுங்க முடியாமலும் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. தற்போது, குன்னுார்– மேட்டுப்பாளையம் சாலை துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், வாகனங்கள் அனைத்தும் கோத்தகிரி வழியாக இயக்கப்படுவதால், இவ்வழித்தடத்தில் போக்குவரத்து மிகுந்து காணப்படுகிறது.

எனவே, அசம்பாவிதம் நடப்பதை தவிர்க்க, குறிப்பிட்ட இடத்தில், மரக்கிளைகளை அகற்றி, கான்கிரீட் தளம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us