/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சிம்ஸ் பூங்காவில் மாணவர்கள் கூட்டம் வண்ண, வண்ண மலர்களை கண்டு குதுாகலம்

ADDED : டிச 05, 2025 08:06 AM
குன்னுார்: நீலகிரி மாவட்டத்துக்கு, பள்ளி,கல்லுாரி மாணவர்களின் குழு சுற்றுலா தற்போது துவங்கிய நிலையில், குன்னுார் சிம்ஸ் பூங்காவில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் ஏப்., மே மாதங்களில் கோடை சீசனை போன்று, அக்., நவ., மாதங்களில், 2வது சீசன் காலங்களில், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கிறது. டிச., மாதம் மாணவ, மாணவியர் குழு சுற்றுலாவாக வருகை தருகின்றனர்.
தற்போது, பள்ளி மாணவ மாணவிகளின் குழு சுற்றுலா அதிகரித்து வருகிறது.
அதில், குன்னுார் சிம்ஸ் பூங்கா, லேம்ஸ்ராக் உள்ளிட்ட சுற்றுலா மையங்களுக்கு மாணவர்கள் அழைத்து செல்லப்படுகின்றனர்.
குன்னுாரில் அவ்வப்போது சாரல் மழை, குளிர், மேகமூட்டம் என மாறுபட்ட கால நிலை நிலவி வரும் நிலையில், வெம்மை ஆடைகளுடன் பயணிகள் வருகின்றனர்.
சிம்ஸ் பூங்காவில், இரண்டாம் சீசனுக்கு நடவு செய்யப்பட்ட பால்சம், சால்வியா உள்ளிட்ட மலர்கள் தற்போதும் பூத்து குலுங்கி சுற்றுலா பயணிகளை வசீகரிக்கிறது. வண்ண மயமான பூக்களின் முன்பு நின்று 'செல்பி' மற்றும் புகைப்படம் எடுப்பதில் அனைவரும் ஆர்வம் கொண்டு வருகின்றனர்.