/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வெளியூர் செல்ல திரண்ட பயணியர் கூட்டம்
/
வெளியூர் செல்ல திரண்ட பயணியர் கூட்டம்
ADDED : நவ 03, 2024 10:20 PM

ஊட்டி; ஊட்டியிலிருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்ல பயணியரின் கூட்டம் அதிகரித்ததால் போலீசார் பயணிகளை வரிசையில் நிற்க வைத்து பஸ்சில் பாதுகாப்புடன் ஏற்றி அனுப்பி வைத்தனர்.
கடந்த அக் ., 31ம் தேதி தீபாவளி பண்டிகையை தொடர்ந்து, 3ம் தேதி வரை தொடர் விடுமுறையாக இருந்தது. தீபாவளி பண்டிகைக்கு வெளியூரில் வேலை பார்பவர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் சொந்த கிராமங் களுக்கு வந்தனர்.
தீபாவளி பண்டிகை முடிந்து நேற்று, ஊட்டி சுற்றுவட்டார கிராம மக்கள் வெளி மாவட்டங்களுக்கு புறப்பட்டனர். இதனால், ஊட்டி மத்திய பஸ் ஸ்டாண்டிலிருந்து மேட்டுப்பாளையம்,கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல காலை முதலே பயணியர் கூட்டம் அதிகரித்தது. பின் , கிளை மேலாளர்கள் ராஜ்குமார், தங்கராஜ் ஆகியோர் போலீசாருடன் இணைந்து பயணியரை வரிசையில் நிற்க வைத்து, பஸ்சில் ஏற்றி பாதுகாப்பாக அந்தந்த பகுதிகளுக்கு அனுப்பி வைத்தனர்.
தீபாவளியை ஒட்டி இன்று வரை ஊட்டியிலிருந்து. 30 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது . பயணியரின் வருகையை பொறுத்து கூடுதல் பஸ்களும் இயக்கப்பட்டன.
ஊட்டி மத்திய பஸ் ஸ்டாண்டில் வழக்கத்தை விட பயணியர் கூட்டம் அதிகரித்ததால், நெரிசலை சாதகமாக்கும் திருடர்கள் பொருட்களை களவாடும் அபாயம் உள்ளது. குறிப்பாக , மொபைல் போன்களை நோட்டமிட்டு திருடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதை தொடர்ந்து, போலீசார் ஒலி பெருக்கி மூலம் அறிவிப்பு கொடுத்து பயணியரை உஷார்படுத்தினர்.