/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மரம் விழுந்து உடைந்த கம்பம்; மின் தடையால் மக்கள் பாதிப்பு
/
மரம் விழுந்து உடைந்த கம்பம்; மின் தடையால் மக்கள் பாதிப்பு
மரம் விழுந்து உடைந்த கம்பம்; மின் தடையால் மக்கள் பாதிப்பு
மரம் விழுந்து உடைந்த கம்பம்; மின் தடையால் மக்கள் பாதிப்பு
ADDED : அக் 16, 2024 08:49 PM

குன்னுார் : குன்னுாரில் தொடரும் கனமழையால் மரங்கள்; மின்கம்பங்கள் மீது விழுந்ததால் மின்தடை ஏற்பட்டது.
குன்னுார் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், குன்னுார் வெலிங்டன் 'சப்ளை டிப்போ' -பிளாக் பிரிட்ஜ் சாலையில், 3 மரங்கள் மின்கம்பிகள் மீது விழுந்தது. இதனால், இரு மின் கம்பங்கள் உடைந்தன.
தகவலின் பேரில், தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் குமார் தலைமையில், தீயணைப்பு வீரர்கள், மரங்களை வெட்டி அகற்றினர். மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கலையரசி தலைமையில், மின்வாரிய ஊழியர்கள், புதிய மின் கம்பங்களை மாற்றி அமைத்தனர்.
இதனால், 3 மணி நேரத்திற்கு மேல் 'சப்ளை டிப்போ, ஆப்பிள் பீ' உட்பட சில இடங்களில் மின்தடை ஏற்பட்டது. இந்த பகுதிகளில் கற்பூர மரங்கள், சாலையில் விழும் அபாயகரமாக உள்ளதால் உடனடியாக கன்டோன்மென்ட் வாரியம் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.