/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வீடு இல்லாத அனைவருக்கும் வீடு; கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்
/
வீடு இல்லாத அனைவருக்கும் வீடு; கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்
வீடு இல்லாத அனைவருக்கும் வீடு; கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்
வீடு இல்லாத அனைவருக்கும் வீடு; கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்
ADDED : அக் 03, 2024 11:51 PM

கூடலுார் : 'கூடலுார் ஸ்ரீமதுரை ஊராட்சியில், வீடுகள் இல்லாத அனைவருக்கும் வீடுகள் கட்டித்தர வேண்டும்,' என, கிராம சபை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
கூடலுார் ஸ்ரீமதுரை ஊராட்சியின் கிராம சபை கூட்டம், குங்கூர்மூலா அரசு பள்ளி வளாகத்தில், நடந்தது. கூட்டத்துக்கு தலைவர் சுனில் தலைமை வகித்தார். கிராம சபை தீர்மானங்களை, செயலாளர் சோனிஷாஜி வாசித்தார். தொடர்ந்து, மக்கள் அடிப்படை பிரச்னைகள், தேவைகள், கோரிக்கைகள் குறித்து பேசினார்.
கூட்டத்தில், 'மக்கள் வசிப்பிட பகுதிகளை, ஊராட்சி நிர்வாகத்திற்கு தெரியாமல் வன நிலமாக மாற்ற கூடாது; ஊராட்சியில் வீடு இல்லாத அனைவருக்கும் வீடுகள் வழங்க வேண்டும்,' உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மேலும், நீலகிரி மாவட்டத்தில், 'துாய்மை பாரத திட்டம்' சார்பாக சிறந்த ஊராட்சியாக, ஸ்ரீ மதுரை ஊராட்சி தேர்வு செய்யப்பட்டு, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், 7.5 லட்சம் ரூபாய் பரிசு கிடைத்துள்ளது.
இதற்கு காரணமான துாய்மை பணியாளர்களுக்கு கிராம சபை கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டு இனிப்பு வழங்கப்பட்டது.

