/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குடியிருக்க வீடு: இருளை போக்க மின் இணைப்பு :மசினகுடி கேம்ப் மக்கள் வலியுறுத்தல்

ADDED : நவ 25, 2025 07:07 AM

ஊட்டி: மசினகுடி கேம்ப் பகுதிக்கு மின்சார இணைப்பு வழங்க வலியுறுத்தி, கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.
மசினகுடி கேம்ப் பகுதி மக்கள் அளித்துள்ள மனு: சிங்கார நீர்மின் திட்ட பணிகளுக்காக, 30 குடும்பங்கள் கடந்த, 40 வருடங்களுக்கு முன்பு மசினகுடி கேம்ப் பகுதிக்கு வந்து தற்போது வரை அங்கு தங்கி உள்ளோம். சுடுகாடு அருகில் உள்ள பகுதியில் நாங்கள் வசித்து வருகிறோம்.
சரியான வீடுகள் இல்லாமல் தகர கூரைகளில் வசித்து வரும் நாங்கள் மின்சார இணைப்பு இல்லாத தால் கடந்த பல ஆண்டுகளாக அவதிப்பட்டு வருகிறோ ம்.
உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட கலெக்டரிடம் பலமுறை மனு கொடுத்தும் எங்களுக்கு எந்தவித தீர்வும் கிடைக்கவில்லை. தொழில்நுட் பம் வளர்ந்துள்ள தற்போதைய காலகட்டத்திலும் எங்கள் குழந்தைகள் தெரு விளக்கு வெளிச்சத்தில் படிக்கின்றனர். எனவே, எங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி குடியிருக்க வீடு மற்றும் எங்கள் குழந்தைகள் படிக்க மின்சார வசதி ஏற்படுத்தி தர தாங்கள் ஆவன செய்ய வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.