/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கேரட் தோட்டத்தில் களை எடுக்கும் பணியில் விவசாயிகள் தீவிரம்
/
கேரட் தோட்டத்தில் களை எடுக்கும் பணியில் விவசாயிகள் தீவிரம்
கேரட் தோட்டத்தில் களை எடுக்கும் பணியில் விவசாயிகள் தீவிரம்
கேரட் தோட்டத்தில் களை எடுக்கும் பணியில் விவசாயிகள் தீவிரம்
ADDED : நவ 25, 2025 07:07 AM

கோத்தகிரி: கோத்தகிரி பகுதியில் கேரட் தோட்டங்களில் களை எடுக்கும் பணியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளான, நெடுகுளா, கூக்கல்தொரை, வ.உ.சி., நகர், ஈளாடா, கதகுதொறை மற்றும் கட்டபெட்டு உள்ளிட்ட பகுதிகளில், தேயிலை விவசாயத்திற்கு அடுத்தபடியாக, மலை காய்கறி சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. நடப்பு போகத்தில், பனி தாக்கத்திலும் பாதிக்காத கேரட் அதிக பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளது.
கோட் விதைத்த நாளில் இருந்து, போதிய மழை இல்லாததால் விவசாயிகள் கூடுமான வரை, ஓடை தண்ணீரை காலை நேரத்தில், தோட்டங்களுக்கு தண்ணீர் பாய்ச்சி, பயிரை பராமரித்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த இரு நாட்களுக்கு முன்பு லேசாக பெய்த மழையில், நிலம் ஓரளவு ஈரம் கண்டுள்ளது. இதனால், உரம் இடுவதற்கு ஏதுவாக களை எடுக்கும் பணியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.