/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கிராமத்திற்கு வந்த சிறுத்தை கன்று குட்டி பலி
/
கிராமத்திற்கு வந்த சிறுத்தை கன்று குட்டி பலி
ADDED : டிச 29, 2025 06:21 AM
குன்னுார்: குன்னுார் வெலிங்டன் அருகே பாபு வில்லேஜில், இரவில் வந்த சிறுத்தை கன்றுக்குட்டியை அடித்து இழுத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குன்னுார் வெலிங்டன் கிடங்கு, பாபு வில்லேஜ், ஆரோக்கியபுரம், ஜெகதளா பாலாஜி நகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இரவு நேரங்களில் சிறுத்தைகள் நடமாட்டம் உள்ளது.
நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:00 மணியளவில், பாபு வில்லேஜிற்கு வந்த சிறுத்தை, அலெக்ஸ் என்பவரின் கால்நடை கொட்டகையில் இருந்து, கன்றுக்குட்டியை அடித்து இழுத்து சென்றது.
மக்கள் சப்தம் எழுப்பி விரட்ட முயன்றதால் கன்றுக்குட்டியை அதே இடத்தில் விட்டுவிட்டு ஓட்டம் பிடித்துள்ளது.
கட்டப்பெட்டு வனத்துறையினருக்கு, மக்கள் புகார் தெரிவித்தனர். இறந்து கிடந்த கன்றுகுட்டியை வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
புகார் கொடுத்த சஜி கூறுகையில், ''அடிக்கடி இங்கு வந்து செல்லும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதிக்குள் விட வேண்டும்,'' என்றார்.

