/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தேயிலை தோட்ட பாறையில் ஓய்வெடுத்த சிறுத்தை
/
தேயிலை தோட்ட பாறையில் ஓய்வெடுத்த சிறுத்தை
ADDED : டிச 19, 2025 05:19 AM
குன்னுார்: குன்னுார் உலிக்கல் சாலையோர தேயிலை தோட்டத்தில் பகல் நேரத்தில் அமர்ந்திருந்த சிறுத்தையால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
குன்னுார் வடபகுதிகளில் இருந்து வெளியேறும் சிறுத்தைகள் உணவுக்காக குடியிருப்பு பகுதிகளுக்கு வந்து செல்வது அதிகரித்துள்ளது.
இந்நிலையில், உலிக்கல் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள சாலையோர தேயிலை தோட்டத்தில் பாறையின் மீது சிறுத்தை அமர்ந்திருந்தது. இதனை அரசு பஸ்சில் பயணம் மேற்கொண்ட பயணிகள் பார்த்துள்ளனர்.
இந்த பகுதியில் இரவு நேரத்தில் மட்டுமே நடமாடிய சிறுத்தை தற்போது பகல் நேரத்திலும் வெயிலுக்காக வந்து பாறையில் அமர்ந்து செல்கிறது. இதனால் தோட்டத்தில் தேயிலை பறிக்க செல்லும் தொழிலாளர்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே, வனத்துறையினர் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

