/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அரசு நடுநிலை பள்ளியில் வானவில் மன்ற ஆய்வக சோதனை
/
அரசு நடுநிலை பள்ளியில் வானவில் மன்ற ஆய்வக சோதனை
ADDED : டிச 19, 2025 05:19 AM
கோத்தகிரி: கோத்தகிரி ஒரசோலை அரசு நடுநிலைப் பள்ளியில், வானவில் மன்ற ஆய்வக சோதனை வாயிலாக, கற்றல் செயல்பாடுகள் குறித்த விளக்கம் அளிக்கப்பட்டது.
பள்ளி கல்வித்துறை சார்பில் அரசு நடுநிலைப் பள்ளிகளில், 6, 7 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு, அறிவியலை ஊக்குவிக்கவும், வளர்க்கவும், பள்ளியில் வானவில் மன்றம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, ஒரசோலை அரசு நடுநிலைப்பள்ளியில், வானவில் மன்ற கருத்தாளர் ராகவேந்தர், உயிரியல் நுண்ணோக்கி, தண்ணீர் தெளிப்பான், காற்கறி, பழங்கள் குறித்து, பேட்டரி மற்றும் வடிவியல் வாயிலாக இயற்கணிதம் கற்றல் செயல்பாடுகளை செய்து காட்டினார்.
மாணவர்களும் ஆர்வமுடன் அறிவியல் கற்றல் செயல்பாடுகளில் ஈடுபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை, பள்ளி தலைமை ஆசிரியர் நஞ்சுண்டன் மற்றும் ஆங்கில பட்டதாரி ஆசிரியை சோனியா ஆகியோர் செய்திருந்தனர்.

