/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
யானை துரத்தியதில் கீழே விழுந்தவர் காயம்
/
யானை துரத்தியதில் கீழே விழுந்தவர் காயம்
ADDED : நவ 14, 2024 05:26 AM
பந்தலுார்: பந்தலுார் அருகே கருத்தாடு பகுதியில் யானை துரத்தியத்தில் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
பந்தலுார் அருகே அய்யன்கொல்லி பகுதியில் கருத்தாடு பகுதி உள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பழங்குடியின மக்கள் குடும்பத்துடன் கடைக்கு சென்று, வீடுகளுக்கு திரும்பி சென்ற போது, யானை துரத்தியதில் வனப்பகுதிக்குள் ஓடி அனைவரும் உயிர் தப்பினர்.
இந்நிலையில், நேற்று மதியம், 3:00 மணிக்கு, கருத்தாடு பகுதியில் தொகுப்பு வீடு பணி மேற்கொண்டுள்ள சுரேஷ் என்பவர் பைக்கில் சென்றுள்ளார். அப்போது, சாலையில் நடந்து வந்த யானைகள் இவரை துரத்தி உள்ளன. பைக்கை கீழே போட்டுவிட்டு ஓடி உயிர் தப்பி உள்ளார்.
மக்கள் கூறுகையில், 'இந்த பகுதியில் தொடர்ந்து யானைகள் முகாமிட்டு வரும் நிலையில், கூடுதலாக வன பணியாளர்களை வரவழைத்து யானைகளை அடர்த்தியான வனப்பகுதிக்கு விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.