/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
புதிய பள்ளி கட்டடம் பயன்பாட்டுக்கு வந்தால் பயன்
/
புதிய பள்ளி கட்டடம் பயன்பாட்டுக்கு வந்தால் பயன்
ADDED : அக் 18, 2024 10:05 PM

கூடலுார்: கூடலுார் அரசு மேல்நிலைப் பள்ளியில், 14 வகுப்பறைகளுடன் கூடிய புதிய கட்டடத்தை, பயன்பாட்டுக்கு கொண்டு வர பெற்றோர் வலியுறுத்தி உள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில், உள்ள அரசு மேல்நிலப் பள்ளிகளில், கூடலுார் அரசு மேல்நிலைப் பள்ளியில் அதிக மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
இப்பள்ளியில் பழமையான கட்டடங்களுக்கு மாற்றாக புதிய வகுப்பறை கட்டடங்கள் கட்டி தர, பெற்றோர் வலியுறுத்தி வந்தனர்.
அதனை ஏற்று நபார்டு திட்ட மூலம், 14 வகுப்பு வரைகளுடன் கூடிய புதிய கட்டடம் கட்ட, 3.38 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
தொடர்ந்து, பள்ளியில் பழமையான, கட்டடங்கள் இடிக்கப்பட்டு புதிய கட்டடங்கள் கட்டும் பணி துவங்கப்பட்டது. புதிய கட்டடப் பணிகள், நிறைவு பெற்ற நிலையில், அவை திறந்து பயன்பாட்டுக்கு வராததால் பெற்றோர் அதிருப்தி அடைந்துள்ளனர்.
பெற்றோர் கூறுகையில், 'வகுப்பறை பற்றாக்குறைக்கு தீர்வு காணும் வகையில், 14 வகுப்பறைகளுடன் புதிய கட்டடம் கட்டப்பட்டு இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. கட்டட பணிகள் நிறைவடைந்த நிலையில் பயன்பாட்டுக்கு வரவில்லை. பள்ளியில் வகுப்பறையின் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, புதிய கட்டடத்தில் உள்ள வகுப்பறைகளை மாணவர்கள் பயன்பாட்டுக்கு அனுமதிக்க வேண்டும்,' என்றனர்.