/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பஸ் ஸ்டாண்டில் நாய்கள் கூட்டம்: அச்சத்தில் நடமாடும் பயணிகள்
/
பஸ் ஸ்டாண்டில் நாய்கள் கூட்டம்: அச்சத்தில் நடமாடும் பயணிகள்
பஸ் ஸ்டாண்டில் நாய்கள் கூட்டம்: அச்சத்தில் நடமாடும் பயணிகள்
பஸ் ஸ்டாண்டில் நாய்கள் கூட்டம்: அச்சத்தில் நடமாடும் பயணிகள்
ADDED : ஜன 15, 2024 10:41 PM

ஊட்டி;ஊட்டி மத்திய பஸ் ஸ்டாண்டில் நாய்களின் தொல்லை அதிகமாக இருப்பதால், பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.
சுற்றுலா நகரமான ஊட்டிக்கு, சுற்றுலா பயணிகள் உட்பட, அன்றாட தேவைகளுக்காக வரும் உள்ளூர் மக்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. வெளி மாநிலங்கள் மற்றும் உள்ளூர் மக்கள் தங்களது இருப்பிடங்களுக்கு திரும்பி சென்றுவர, ஊட்டி மத்திய பஸ் ஸ்டாண்டுக்கு வந்தாக வேண்டும்.
இதனால், மத்திய பஸ் நிலையத்தில் பயணிகளின் கூட்டம், நாள்தோறும் அதிகரித்து காணப்படுகிறது. பயணிகள் நிறைந்த மத்திய பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் சமீப காலமாக, தெரு நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது.
பஸ் நிலையத்தை ஒட்டி அமைந்துள்ள கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளை உண்ணுவதற்காக வரும் தெரு நாய்கள், பஸ் நிலையத்தில் உலா வருகின்றன. அவைகளுக்குள் சண்டை ஏற்படுவதால் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. இதனால், அச்சத்துடன் பயணிகள் நடமாடி வருகின்றனர்.எனவே, அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.