/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
காலையில் 'வாக்கிங்' வந்த ஒற்றை யானை: ஓட்டம் பிடித்த உள்ளூர் மக்கள்
/
காலையில் 'வாக்கிங்' வந்த ஒற்றை யானை: ஓட்டம் பிடித்த உள்ளூர் மக்கள்
காலையில் 'வாக்கிங்' வந்த ஒற்றை யானை: ஓட்டம் பிடித்த உள்ளூர் மக்கள்
காலையில் 'வாக்கிங்' வந்த ஒற்றை யானை: ஓட்டம் பிடித்த உள்ளூர் மக்கள்
ADDED : பிப் 17, 2024 12:46 AM

பந்தலுார்:பந்தலூர் அருகே நெலக்கோட்டை பஜாரில் நேற்று காலை உலா வந்த ஒற்றை யானையால் மக்கள் ஓட்டம் பிடித்தனர்.
பிதர்காடு வனச்சரக எல்லைக்கு உட்பட்ட, நெலக்கோட்டை பஜாரில் நாள்தோறும் ஒற்றை யானை மக்களை அச்சுறுத்தி வருகிறது. பகல் நேரங்களில் பஜாரை ஒட்டிய புதரில் படுத்து ஓய்வு எடுக்கும் இந்த யானை, இரவு, 7:00 மணிக்கு மேல் குடியிருப்புகள் மற்றும் பஜார் பகுதி சாலையில் உலா வருவதை வழக்கமாக கொண்டு உள்ளது.
இந்நிலையில், நேற்று காலை, 7:00 மணிக்கு இப்பகுதியினர் வேலைக்கு சென்று கொண்டிருந்ததுடன், சிலர் 'வாக்கிங்' சென்று கொண்டிருந்தனர். அப்போது, கரியசோலை செல்லும் சாலையில் 'ஹாயாக' நடந்து வந்த ஒற்றை யானை, பஜார் சாலையில் வந்தது. இதனால், வாக்கிங் சென்றவர்களும் வேலைக்கு சென்றவர்களும் ஓட்டம் பிடித்தனர்.
இதை தொடர்ந்து, வனக்குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து யானையை பஜாரை ஒட்டிய புதருக்குள் துரத்தினர்.
எனினும் யானை வனத்துறையினரை, துரத்தியதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
வனச்சரகர் ரவி கூறுகையில், ''நெலக்கோட்டை, பாட்டவயல், சந்தக்குன்னு ஆகிய மூன்று இடங்களிலும் மூன்று ஒற்றை யானைகள், முகாமிட்டு பொதுமக்களையும், விவசாயிகளையும் அச்சுறுத்தி வருகின்றன.
யானைகளால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படா வண்ணம் வனத்துறையினர் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்கள் காலை மற்றும் மாலை, இரவு நேரங்களில் கவனத்துடன் வெளியில் நடமாட வேண்டும்,'' என்றார்.