/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பல ஆண்டுகளாக துார்வாராத ஓடை; மழை நீரை சேமிப்பதில் சிக்கல்
/
பல ஆண்டுகளாக துார்வாராத ஓடை; மழை நீரை சேமிப்பதில் சிக்கல்
பல ஆண்டுகளாக துார்வாராத ஓடை; மழை நீரை சேமிப்பதில் சிக்கல்
பல ஆண்டுகளாக துார்வாராத ஓடை; மழை நீரை சேமிப்பதில் சிக்கல்
ADDED : ஆக 08, 2025 08:27 PM

கோத்தகிரி: கோத்தகிரி குடிமனை நீரோடை பல ஆண்டுகளாக துார் வராமல் உள்ளதால், மழை நீரை சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கோத்தகிரி மலைப்பகுதியில், பல ஊற்றுகளாக வெளியேறும் குடிமனை நீரோடையை நம்பி, நுாற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் தேயிலை மற்றும் காய்கறி விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. வறட்சி நாட்களிலும் வற்றாத இந்த நீரோடை, பல ஆண்டுகளாக தூர்வாராமல் உள்ளது.
இதனால், காட்டு செடிகள் ஆக்கிரமித்து, ஓடையின் ஆழமும், அகலமும் வெகுவாக குறைந்து, எதிர்வரும் நாட்களில் மழை நீரை சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், வறட்சி நாட்களில் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது தவிர, ஓடை துார்வாராத நிலையில், தீவிர மழையின் போது, பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரால், கரையோர விவசாய நிலங்கள் சேதமடைந்து வருகிறது.
எனவே, விவசாயிகள் நலன் கருதி, மழை தீவிரம் அடைவதற்கு முன்பு, ஓடையை துார்வார, சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பது அவசி யம்.