ADDED : செப் 22, 2026 06:35 PM
அ நிறம் | அளவு
கூடலூர்: மாநில நல்லாசிரியர் விருது பெற்ற ஸ்ரீதுரை அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியருக்கு பாராட்டு விழா நடந்தது.
கூடலுார் ஸ்ரீமதுரை அரசு மேல்நிலைப் பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர் சசிகலா, நடப்பு ஆண்டுக்கான நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார். சென்னையில், 5ம் தேதி நடந்த அரசு விழாவில், அவருக்கு தமிழக கல்வி அமைச்சர், நல்லாசிரியர் விருது வழங்கினார். விருது பெற்ற சசிகலாவுக்கு பள்ளியில் பாராட்டு விழா நடந்தது. விழாவில் பள்ளி ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழுவினர், பெற்றோர் ஆசிரியர்கள் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர்.
