ADDED : செப் 22, 2026 06:13 PM
அ நிறம் | அளவு
ஊட்டி: ஊட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
சங்க தலைவர் நாகராஜ் தலைமை வகித்தார். செயலாளர் நடராஜன், பொருளாளர் செவனன் முன்னிலை வகித்தனர். அதில், ‘விவசாய சங்க பிரிதிநிதி என்ற முறையில் செயல்பட்டு வரும் ஈசன் முருகசாமி, சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் அளித்த பேட்டியில், கூட்டுறவு கடன் சங்க பணியாளர்களை வன்முறைக்கு உள்ளாக்கும் வகையில் பேசியுள்ளார்.
அதற்கு சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என, வுலியுறுத்தப்பட்டது. துணைத் தலைவர்கள் லட்சுமணன், சதீஷ், இணை செயலாளர்கள் ராமலிங்கம், சந்தோஷ் மற்றும் கூட்டுறவு நிறுவன பணியாளர்கள், பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் உட்பட பல பங்கேற்றனர்.
