ADDED : செப் 22, 2026 06:13 PM
அ நிறம் | அளவு
பந்தலுார்: பந்தலுார் அருகே அய்யன்கொல்லி ஆரம்ப சுகாதார நிலைய குடியிருப்பு பகுதியில் மூங்கில் மற்றும் புதர்கள் சூழ்ந்து வருவது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
பந்தலுார் அருகே அய்யன்கொல்லி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும், டாக்டர் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் தங்குவதற்கு, அதனை ஒட்டி குடியிருப்புகள் அமைக்கப்பட்ட உள்ளது. இதன் அருகே வனப்பகுதி அமைந்துள்ள நிலையில், பகல் நேரங்களிலும் யானைகள் இந்த வழியாக வந்து செல்வது வழக்கம். இந்நிலையில், குடியிருப்புகளை சுற்றிலும் புதர்கள் மற்றும் மூங்கில் மரங்கள் சூழ்ந்து காணப்படுகிறது. இங்கு குடியிருக்கும் மருத்துவ பணியாளர்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். எனவே, குடியிருப்புகளை சுற்றி புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
