தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ 195 பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவாக்கம்

195 பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவாக்கம்

195 பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவாக்கம்


ADDED : செப் 22, 2026 06:01 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 22, 2026 06:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஊட்டி: நீலகிரியில் காலை உணவு திட்ட விரிவாக்கத்தின் வாயிலாக, 195 பள்ளிகளில் பயிலும், 8,338 மாணவ, மாணவிகள் பயன் பெறுகின்றனர்.

ஊட்டி பெத்லகேம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் காமராஜர் காலை உணவு திட்ட விரிவாக்கத்தை, கலெக்டர் லட்சுமி பவ்யா துவக்கி வைத்து, மாணவ, மாணவிகளுடன் உணவு உட்கொண்டார்.

இத்திட்டத்தின் வாயிலாக நீலகிரியில், 364 பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் , 99,440 மாணவ , மாணவிகள் பயனடைந்து வருகின்றனர். ‘இத்திட்டத்தின் விரிவாக்கத்தின் வாயிலாக , 6 முதல் 8ம் வகுப்பு வரை அனைத்து அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள்,’ என, 195 பள்ளிகளில் பயிலும், 8,338 மாணவ, மாணவிகள் பயன்பெறுகின்றனர். மொத்தம் இத்திட்டத்தில், 559 பள்ளிகளை சேர்ந்த, 18,278 மாணவ , மாணவிகள் பயன் பெற உள்ளனர். நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் வாசுகி ,மகளிர் திட்ட இயக்குனர் ரூபன் சங்கர் ராஜ் , மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருநாவுக்கரசு உட்பட அரசு துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us