/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
போக்குவரத்து நெரிசலில் பெட்போர்டு போலீசார் இல்லாததால் பாதிப்பு
/
போக்குவரத்து நெரிசலில் பெட்போர்டு போலீசார் இல்லாததால் பாதிப்பு
போக்குவரத்து நெரிசலில் பெட்போர்டு போலீசார் இல்லாததால் பாதிப்பு
போக்குவரத்து நெரிசலில் பெட்போர்டு போலீசார் இல்லாததால் பாதிப்பு
ADDED : அக் 30, 2024 08:07 PM

குன்னுார்: குன்னுார் பெட்போர்டு அருகே 'இன்கோசர்வ்' இடத்தில், லாரிகள் நிறுத்தி தேயிலை துாள் மூட்டைகள் இறக்கப்படுகிறது. இந்த இடத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இன்கோசர்வ் டீக்கடை அமைத்தது.
ஏற்கனவே இந்த இடத்தில் மற்ற வாகனங்கள் நிறுத்த அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது இட பற்றாக்குறை காரணமாக, இன்கோசர்வ் லாரிகள் மற்றும் அரசு ஜீப்கள் மட்டுமே நிறுத்தப்படுகிறது. மற்ற வாகனங்கள் நிறுத்த இன்ட்கோசர்வ் அனுமதிப்பதில்லை. இங்குள்ள கடைகளுக்கு வரும் வாகனங்கள் சாலையில் நிறுத்தப்படுகிறது. இதனால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக, கோத்தகிரி உட்பட பல்வேறு பகுதிகளுக்கும் செல்லும் அரசு பஸ்கள் நெரிசலில் சிக்கி குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடிவதில்லை. வாகனங்களுக்கு அபராதம் விதிக்கும் பணிக்கு, போலீசார் சென்று விடுவதால், இந்த பகுதியில் போலீசாரும் போக்குவரத்து சீரமைப்பு பணியில் இருப்பதில்லை. இதனால், ஏற்படும் வாக்குவாதம் டிரைவர்களுக்கு பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்துகிறது.
டிரைவர்கள் கூறுகையில், 'இங்கு தொடரும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணவும், பார்க்கிங் வசதிகளை நகராட்சி நிர்வாகம் ஏற்படுத்த வேண்டும்,' என்றனர்.

