/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
இளநீர் ஏற்றி வந்த ஆட்டோ மலைபாதையில் கவிழ்ந்து விபத்து
/
இளநீர் ஏற்றி வந்த ஆட்டோ மலைபாதையில் கவிழ்ந்து விபத்து
இளநீர் ஏற்றி வந்த ஆட்டோ மலைபாதையில் கவிழ்ந்து விபத்து
இளநீர் ஏற்றி வந்த ஆட்டோ மலைபாதையில் கவிழ்ந்து விபத்து
ADDED : ஜன 12, 2025 10:52 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னுார்; குன்னுார் மலை பாதையில் இளநீர் கொண்டு வந்த 'பிக்-அப்' ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
குன்னுார் மேட்டுப்பாளையம் மலைப்பாதை வழியாக புளியம்பட்டியில் இருந்து, ஊட்டிக்கு பிக்- அப் ஆட்டோவில் இளநீர் எடுத்து வரப்பட்டது. அப்போது, மரப்பாலம் அருகே சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. எந்தவித காயமுமின்றி டிரைவர் முருகேசன் தப்பினார். இளநீர் மாற்று வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டது. தொடர்ந்து 'ஹைவே பேட்ரோல்' போலீசார் கிரேன் வரவழைத்து ஆட்டோவை மீட்டனர். ஒரு வழியில் வாகனங்கள் சென்றதால் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படவில்லை.