/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மின் கம்பத்தில் கார் மோதி விபத்து; உயிர் தப்பிய சுற்றுலா பயணிகள்
/
மின் கம்பத்தில் கார் மோதி விபத்து; உயிர் தப்பிய சுற்றுலா பயணிகள்
மின் கம்பத்தில் கார் மோதி விபத்து; உயிர் தப்பிய சுற்றுலா பயணிகள்
மின் கம்பத்தில் கார் மோதி விபத்து; உயிர் தப்பிய சுற்றுலா பயணிகள்
ADDED : அக் 14, 2024 09:17 PM

கூடலுார்: கூடலுார் பழைய பஸ் ஸ்டாண்ட், ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்த கார் மின்கம்பத்தில் மோதிய விபத்தில், கர்நாடக சுற்றுலா பயணிகள் உயிர் தப்பினர்.
கர்நாடக மாநிலம், ஹாசன் பகுதியை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஐந்து பேர், ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு சென்று விட்டு, நேற்று மாலை கர்நாடக செல்வதற்காக கூடலுார் நோக்கி வந்தனர்.
அப்போது, கூடலுார் பழைய பஸ் ஸ்டாண்ட், ஊட்டி சாலையில் கார் கட்டுப்பாட்டு இழந்து, சாலையோர மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதனை பார்த்த மக்கள் அலறி அடித்து ஓடினர். காரில் பயணம் செய்த ஐந்து பேர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். விபத்து காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போக்குவரத்து எஸ்.எஸ்.ஐ., கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் போக்குவரத்தை சீரமைத்தனர். போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.