/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
முதுமலை சாலையில் விபத்து; கவிழ்ந்த கரும்பு லாரி மீட்பு
/
முதுமலை சாலையில் விபத்து; கவிழ்ந்த கரும்பு லாரி மீட்பு
முதுமலை சாலையில் விபத்து; கவிழ்ந்த கரும்பு லாரி மீட்பு
முதுமலை சாலையில் விபத்து; கவிழ்ந்த கரும்பு லாரி மீட்பு
ADDED : ஜூலை 01, 2025 09:52 PM

கூடலுார்; கர்நாடகாவில் இருந்து கரும்பு ஏற்றி வந்த லாரி, முதுமலை-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கி கவிழ்ந்தது.
கர்நாடகாவில் இருந்து, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள், பழங்கள், கரும்பு, நேந்திரன் வாழை உள்ளிட்ட பொருட்கள், கூடலுார் முதுமலை வழியாக லாரிகளில் கேரளாவுக்கு அதிகளவில் கொண்டு செல்லப்படுகின்றன.
இந்நிலையில், நேற்று முன்தினம், கர்நாடகா மாண்டியா பகுதியிலிருந்து கரும்பு ஏற்றிய லாரி, கூடலுார் நோக்கி வந்தது. இரவு, 9:00 மணிக்கு முதுமலை-மைசூரு தேசிய நெடுஞ்சாலை, தொரப்பள்ளி அருகே, எதிரே வேகமாக வந்த வாகனத்திற்கு வழி விடும் போது, லாரி கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. லாரி ஓட்டுனர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.
லாரியில் இருந்த கரும்பு, சாலையோரம் சிதறியதால், தகவல் அறிந்த வனத்துறையினர், அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, மற்றொரு லாரி வரவழைக்கப்பட்டு கரும்பு ஏற்றி செல்லப்பட்டது.