/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கராத்தே போட்டியில் மாணவர்கள் சாதனை; குன்னுாரில் பாராட்டு விழா
/
கராத்தே போட்டியில் மாணவர்கள் சாதனை; குன்னுாரில் பாராட்டு விழா
கராத்தே போட்டியில் மாணவர்கள் சாதனை; குன்னுாரில் பாராட்டு விழா
கராத்தே போட்டியில் மாணவர்கள் சாதனை; குன்னுாரில் பாராட்டு விழா
ADDED : நவ 18, 2024 09:36 PM

குன்னுார் ; நீலகிரி மாவட்ட கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு குன்னுாரில் பாராட்டு விழா நடந்தது.
'ஆலன் திலக் கராத்தே' பள்ளி சார்பில், ஊட்டியில், மாவட்ட அளவில் கராத்தே போட்டி நடந்தது. அதில், குன்னுார் 'பிளாக் நிஞ்சர்ஸ்' கராத்தே கிளப் மாணவர்கள் பங்கேற்றனர்.
அதில், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பிரிவில், ஹயான்சாய், ஷராஃபா, நட்சத்திரா; 9 வயதுக்கு உட்பட்ட பிரிவில், அமுதன், சுமன், பிரவீன், சனாஃபர்; 11 வயதுக்கு உட்பட்டோரில், மாதேஸ்வரன், சுதிக்ஷன், தியா, குஷி, நிலாக்ஷா ; 13 வயதுக்கு உட்பட்ட சீனியர் பிரவுன் பெல்ட் பிரிவில், சுதீப், ஷாஜன், ரிஃபா, ஹாசினி ஸ்ரீ ஆகியோர் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்றனர்.
பிளாக் பெல்ட் பிரிவில், சபரீஷ், மிதுன் குரு, தனிஷ்கா, ஜனார்த், புனிதா, தர்ஷித், நிவாஸ், திறன்குமார், யுவனேஸ்வரன் ஆகியோர் வெற்றி பெற்றனர். இவர்களுக்கு குன்னுார் சி.எஸ்.ஐ., மண்டபத்தில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.
துணைத் தலைவர் ஜான், பொருளாளர் ராமகிருஷ்ணன், பிளாக் நிஞ்சர்ஸ் கராத்தே பயிற்சினர்கள் நித்யா, செந்தில் குமார் மாஸ்டர்கள் பங்கேற்றனர். சீனியர் பிளாக் பெல்ட் பெற்றகள் கவுரவிக்கப்பட்டனர். ஏற்பாடுகளை, ஆலன் திலக் கராத்தே பள்ளி தலைவர் செல்வம் செய்திருந்தார்.