ADDED : ஆக 18, 2026 06:31 PM
அ நிறம் | அளவு
குன்னுார்: குன்னுார், ஊட்டி, கோத்தகிரி மற்றும் கூடலுார் பகுதிகளில் செயல்படும் கடைகள், வணிக வளாகங்கள், உணவகங்கள் மற்றும் மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில், தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) முருக பிரசன்னா தலைமையில் அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
42 நிறுவனங்களில் நடத்தப்பட்ட சோதனையில், தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் அல்லது மாற்று விடுமுறை வழங்காமல் விதிமீறலில் ஈடுபட்ட, 19 நிறுவனங்கள் கண்டறியப்பட்டது. அதிகாரிகள் கூறுகையில்,‘ தொழிலாளர்களின் உரிமைகளை மீறும் வகையில் செயல்படுகிற நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றனர்.
