/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அதிரடி! டிரைவர், கண்டக்டர் பணி நேரத்தில் மது பயன்பாடு 'பிரீத் அனலைசர்' வாயிலாக சோதனை தீவிரம்...
/
அதிரடி! டிரைவர், கண்டக்டர் பணி நேரத்தில் மது பயன்பாடு 'பிரீத் அனலைசர்' வாயிலாக சோதனை தீவிரம்...
அதிரடி! டிரைவர், கண்டக்டர் பணி நேரத்தில் மது பயன்பாடு 'பிரீத் அனலைசர்' வாயிலாக சோதனை தீவிரம்...
அதிரடி! டிரைவர், கண்டக்டர் பணி நேரத்தில் மது பயன்பாடு 'பிரீத் அனலைசர்' வாயிலாக சோதனை தீவிரம்...
ADDED : அக் 28, 2025 11:52 PM
ஊட்டி: நீலகிரி போக்குவரத்து கழக பணிமனைகளில் பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் மது அருந்தி பணிக்கு வருகிறார்களா என்பதை கண்டறிய 'பிரீத் அனலைசர்' கருவி வாயிலாக சோதனை மேற்கொண்டு ஊழியர்கள் மீது துறை ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
ஊட்டி அரசு போக்குவரத்து கழகத்தின் கீழ், ஊட்டி, குன்னுார், கோத்தகிரி, கூடலுார் மற்றும் மேட்டுப்பாளையத்தில் ஒரு கிளை என, 5 கிளைகளில், 800க்கும் மேற்பட்ட டிரைவர், கண்டக்டர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 270 வழித்தடத்தில், 320 அரசு பஸ்கள் தமிழகம் உட்பட கேரளா, கர்நாடகாவுக்கு இயக்கப்படுகிறது. தினமும், 1.70 லட்சம் பயணிகள் அரசு பஸ்களை பயன்படுத்தி வருகின்றனர்.
அரசு பஸ்களில் உள்ள ஓட்டுனர் மற்றும் நடத்துனர் சிலர், பணியின்போது மது அருந்தி பஸ்களை இயக்கி வருகின்றனர். இது தொடர்பாக, போக்குவரத்து துறைக்கு பயணியரிடம் இருந்து, பல்வேறு புகார்கள் சென்றன. இதையடுத்து, அரசு பஸ்களை இயக்கும் ஓட்டுனர் மற்றும் நடத்துனர், மது அருந்தி பணிக்கு வரக்கூடாது என, எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
12 ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேலும், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து போக்குவரத்து பணிமனைகளிலும், பணிக்கு வரும் ஓட்டுனர், நடத்துனர்கள் போதையில் உள்ளனரா என்பதை கண்டறிய, 'பிரீத் அனலைசர்' வாயிலாக 'ஆல்ஹகால்' பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. மெக்கானிக்குகளிடமும் சோதனை செய்யப்பட்டு வருகிறது.
போக்குவரத்து கழக பொதுமேலாளர் ஜெய்சங்கர் கூறுகையில், ' ---ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் ஷிப்ட் தொடங்கும் முன், மது அருந்தியுள்ளார்களா என்பதை உறுதிப்படுத்த, பிரீத் அனலைசர் கருவி வாயிலாக டிப்போ மற்றும் இரவில் தங்கும் அறைகளில் அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த ஒரு மாதத்தில், 12 டிரைவர், கண்டக்டர்கள் மது அருந்தியதை கண்டறிந்து அவர்கள் மீது 'சஸ்பெண்ட்', ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த திடீர் சோதனை வாயிலாக, பயணியர் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதோடு, மதுவால் ஏற்படும் விபத்து முற்றிலும் தவிர்க்கப்படும். ' என்றார்.

