/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வனவிலங்கு பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை
/
வனவிலங்கு பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை
ADDED : ஆக 20, 2025 09:17 PM

கூடலுார்; கூடலுார் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் சேரம்பாடி, படைச்சேரி, கையுண்ணி, காபிகாடு, கருத்தாடு கிராம மக்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கூட்டத்துக்கு ஆர்.டி.ஓ., குணசேகரன் தலைமை வகித்தார்.
கூட்டத்தில், பங்கேற்ற மக்கள் பேசுகையில், 'காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க அனைத்து பகுதிகளிலும் அகழி அமைக்க வேண்டும்; கருத்தாடு -கொளப்பள்ளி சாலை, மாங்காமூலா - கருகம்பாடி -முருக்கம்பாடி சாலையை சீரமைக்க வனத்துறையினர் அனுமதிக்க வேண்டும். குடியிருப்பு பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்வதற்கு வனத்துறை விதித்துள்ள தடையை நீக்க வேண்டும்,' என்றனர்.
அதிகாரிகள் கூறுகையில், 'வனவிலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்கவும், அவைகளால் ஏற்படும் பாதிப்பை தவிர்க்க தேவையான நடவடிக்கையும் மேற்கொண்டு வருகிறோம். முறையாக விண்ணப்பித்து அனுமதி பெற்று நிபந்தனைகளை பின்பற்றி, சோலார் மின்வேலி அமைக்கலாம். சாலை சீரமைப்பு தொடர்பாக, ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து, அனுமதி பெற்று சீரமைக்க வேண்டும்,' என்றனர்.
கூட்டத்தில், பந்தலுார் தாசில்தார் நிஷா, சேரம்பாடி வனச்சரகர் அய்யனார், பிதர்காடு வனச்சகர் ரவி, கிராம மக்கள் பங்கேற்றனர்.