தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ நீலகிரியில் இயற்கை விவசாய நில பரப்பை அதிகரிக்க நடவடிக்கை!உழவர் நல சேவை மையங்களை அணுகினால் பயன்

நீலகிரியில் இயற்கை விவசாய நில பரப்பை அதிகரிக்க நடவடிக்கை!உழவர் நல சேவை மையங்களை அணுகினால் பயன்

நீலகிரியில் இயற்கை விவசாய நில பரப்பை அதிகரிக்க நடவடிக்கை!உழவர் நல சேவை மையங்களை அணுகினால் பயன்


UPDATED : ஆக 09, 2026 04:12 PM

ADDED : ஆக 09, 2026 04:10 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 09, 2026 04:12 PM ADDED : ஆக 09, 2026 04:10 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஊட்டி: -: மாவட்டத்தில் இயற்கை விவசாய பரப்பு, இயற்கை விவசாய காய்கறி சந்தையை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது; அரசின் உழவர் சேவை மையங்களை அணுக விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நீலகிரியில் தேயிலைக்கு அடுத்தப்படியாக மலை காய்கறி விவசாயம் , 25 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்படுகிறது. குறிப்பாக , உருளைக்கிழங்கு , கேரட் , பீட்ரூட் , முள்ளங்கி , பீன்ஸ் , வெள்ளைப் பூண்டு உள்ளிட்டவைகள் ஒவ்வொரு போகத்திலும் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக நீலகிரியில் நிலவும் அசாதாரண சூழ்நிலையால் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு மலை காய்கறி விவசாயம் எதிர்பார்த்த அளவு மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இயற்கை விவசாய ஊக்குவிப்பு நீலகிரியில் ரசாயன உரங்களை தவிர்த்து ஆரோக்கியமான உணவு உற்பத்தியை அதிகரிக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் தோட்டக்கலைத்துறை வாயிலாக இயற்கை விவசாயம் தீவிரமாக ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. இப்பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான இயற்கை விவசாய நிலங்களில் நஞ்சு இல்லா காய்கறிகள் மற்றும் பழங்களை பயிரிட விவசாயிகளுக்கு பயிற்சியும் சந்தை வாய்ப்புகளும் உருவாக்கப்பட்டு வருகின்றன.

தோட்டக்கலைத் துறை மற்றும் தன்னார்வ குழுக்கள் இணைந்து விவசாயிகளுக்கு இயற்கை முறை சாகுபடி பயிற்சிகளை வழங்கி வருகின்றன.

களத்தில் 12 ஆயிரம் பேர் அதன்படி , மாவட்டத்தில் சுற்று சூழலை பாதுகாக்கும் வகையில் இயற்கை விவசாய நிலப்பரப்பை அதிகப்படுத்தும் நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவுப்படி , தோட்டக்கலை துறையினர் தீவிர காட்டி வருகின்றனர். இது வரை , 4500 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளது. இயற்கை விவசாயத்தில் , 12 ஆயிரம் சிறு விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இயற்கை விவசாய நிலப்பரப்பு , இயற்கை விவசாய காய்கறிகளின் சந்தையை விரிவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் கூறுகையில் , தோட்டக்கலை வாயிலாக விவசாய சாகுபடிக்கு தேவையான அனைத்து திட்டங்களை தோட்டக்கலைத்துறை திறம்பட மேற்கொண்டு வருகிறது. காய்கறி தோட்டங்களால் சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுத்தாமல் இருக்க இயற்கை விவசாயத்தை ஊக்குவித்து வருகின்றனர்.

இதில் , அதீத உரம் , பூச்சிக்கொல்லி ஆகியவற்றின் விளைவுகளை நீலகிரி மாவட்ட விவசாயிகளுக்கு உணர்த்தும் வகையில் கடந்த , 2018 ம் ஆண்டு முதல் நீலகிரி மாவட்டத்தில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இது வரை , 4500 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளது. இயற்கை விவசாயத்தில் , 12 ஆயிரம் சிறு விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்,'என்றனர்.

உழவர் நல சேவை! விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஒவ்வொரு தாலுகாவிலும் முதல்வரின் உழவர் நல சேவை உள்ளது. மையம் அமைப்பதற்கு , 10 லட்சம் ரூபாய் , அதில் 3 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படும். சேவை மையம் அமைப்பதற்கு தகுதியுடைய வேளாண் பட்டதாரிகள் விண்ணப்பித்து பயன் பெறலாம். உழவர் நல சேவை மையங்களில் விவசாயிகளுக்கு தேவையான அனைத்து சேவைகளும் வழங்கப்படும்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us