/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கிளை நுாலகத்திற்கு ரூ. 22 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டடம்
/
கிளை நுாலகத்திற்கு ரூ. 22 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டடம்
கிளை நுாலகத்திற்கு ரூ. 22 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டடம்
கிளை நுாலகத்திற்கு ரூ. 22 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டடம்
ADDED : ஏப் 18, 2025 11:54 PM

கோத்தகிரி: கோத்தகிரி பில்லிக்கம்பை கிளை நுாலகத்திற்கு, 22 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கூடுதல் கட்டடம் கட்டும் பணி நடந்து வருகிறது.
ஊட்டி ஊராட்சி ஒன்றியம், கக்குச்சி ஊராட்சிக்கு உட்பட்ட, பில்லிக்கம்பை கிராமத்தில், 200 குடும்பங்கள் வசித்து வருகின்றன. தவிர, அருகில் உள்ள ஒன்னதலை, கோவில் மேடு, கலங்கனட்டி மற்றும் குடிமனை பகுதியைச் சேர்ந்த, மக்களுடன், பள்ளி மாணவர்களும் இங்குள்ள நுாலகத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
ஒரு சிறிய அறையில், இயங்கி வந்த நுாலகத்தில், புத்தகங்களை பாதுகாப்பதும், வாசகர்கள் அமர்ந்து புத்தகங்கள் படிக்கவும் இட நெருக்கடி இருந்து வந்தது. இதனால், புத்தகங்களை வெளியே கொண்டு வந்து, புல் தரையில் அமர்ந்து படிக்க வேண்டிய நிலை தொடர்ந்தது.
இந்நிலையில், இங்கு கூடுதல் நுாலக கட்டடம் கட்ட, 22 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. அதன்படி, கட்டுமான பணி துவங்கி நடந்து வருகிறது. இப்பணியை விரைந்து முடித்து திறப்பு விழா நடத்தினால் பல கிராம மக்கள் பயன்பெறுவர்.