ஆதிபராசக்தி ஆடிப்பூர பெருவிழா திரளான பக்தர்கள் பங்கேற்பு
ஆதிபராசக்தி ஆடிப்பூர பெருவிழா திரளான பக்தர்கள் பங்கேற்பு
ADDED : ஆக 30, 2026 07:04 PM
ஊட்டி: -
ஊட்டியில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி இயக்கம் சார்பில், 23 வது ஆண்டு ஆடிப்பூரப் பெருவிழா முளைப்பாரி பால்குட ஊர்வலம் நடந்தது.
விழாவை முன்னிட்டு, காலை, 7:00 மணிக்கு, ஆதிபராசக்தி வழிபாடு மற்றும் சார்பில், சிறப்பு வழிபாடு நடந்தது. காலை, 10:00 மணிக்கு, சமுதாய நல உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
காலை, 10:30 மணிக்கு, கஞ்சி வினியோகம் நிகழ்ச்சியை தொடர்ந்து, செண்டை மேளம், கும்மியாட்டம் மற்றும் கோலாட்டத்துடன், முளைப்பாரி, அக்னி சட்டி, பால் கஞ்சி ஊர்வலம் நடந்தது.
மத்திய பஸ் நிலையம் ஸ்ரீ பாறை முனீஸ்வரர் ஆலயத்தில் இருந்து, கமர்சியல் சாலை, காபி ஹவுஸ் சந்திப்பு வழியாக, சேரிங்கிராஸ் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாடு மன்றத்தை அடைந்தது.
இதில், மாவட்டத்தில் பல்வேறு பகுதி வழிபாட்டு மன்றங்களில் இருந்து, நூற்றுக்கணக்கான பெண்கள் உட்பட, பக்தர்கள் பங்கேற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது,
நிகழ்ச்சி ஏற்பாடுகளை, நீலகிரி மாவட்ட ஆதிபராசக்தி நிர்வாக குழு மற்றும் அனைத்து ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றங்கள் செய்திருந்தன.
