/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சுகாதார பிரிவில் முறைகேடு :அ.தி.மு.க., குற்றச்சாட்டு
/
சுகாதார பிரிவில் முறைகேடு :அ.தி.மு.க., குற்றச்சாட்டு
சுகாதார பிரிவில் முறைகேடு :அ.தி.மு.க., குற்றச்சாட்டு
சுகாதார பிரிவில் முறைகேடு :அ.தி.மு.க., குற்றச்சாட்டு
ADDED : மார் 14, 2024 11:21 PM
குன்னுார்;குன்னுார் நகராட்சிக்கு உட்பட்ட, 30 வார்டுகளில், குப்பைகள் சேகரிக்க தனியாருக்கு டெண்டர் விடப்பட்டு, பணிகளை மேற்கொள்ள ஒப்பந்தம் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு துாய்மை பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
பணியாளர்களுக்கான சம்பளம், மழை கால காலணி, கையுறை, மழை கோட், கம்பளி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கி பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. நகராட்சியில் வீடுகள் தோறும் சென்றும் மட்கும், குப்பை மட்காத குப்பைகளிலும், 9 வகையான குப்பைகளை பிரித்து பணியாற்றுகின்றனர். இந்நிலையில், சுகாதாரத் துறையில் பல்வேறு முறை கேட்டுகள் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பாக, நகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க., கவுன்சிலர் சரவணகுமார் பேசுகையில், ''நகராட்சியில், 35 துப்புரவு பணியாளர்கள் பணியாற்றி வரும் நிலையில், 60 பேர் உள்ளதாக போலி கணக்குகள் காண்பித்து முறைகேட்டில் ஈடுபடுகின்றனர். அதிகாரிகள் மற்றும் சில கவுன்சிலர்கள் இதற்கு உடந்தையாக உள்ளனர். விசாரணை கமிட்டி அமைத்து முறைகேடுகளை களைய வேண்டும்,'' என்றார்.

