/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அ.தி.மு.க., ஆண்டு விழா திரளானோர் பங்கேற்பு
/
அ.தி.மு.க., ஆண்டு விழா திரளானோர் பங்கேற்பு
ADDED : அக் 17, 2024 10:06 PM

கோத்தகிரி : கோத்தகிரியில் அ.தி.மு.க., சார்பில், 53வது ஆண்டு விழா நடந்தது.
கோத்தகிரி டானிங்டன் பகுதியில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட செயலாளர் வினோத் தலைமை வகித்து, முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து,'தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைய அனைவரும் பாடுபடவேண்டும்,' என, உறுதி மொழி எடுக்கப்பட்டது. கட்சியினர் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
முன்னாள் எம்.பி., அர்ஜூணன், முன்னாள் எம்.எல்.ஏ., சாந்தி ராமு அவைத்தலைவர் மணி ஆகியோர், முன்னிலை வகித்தனர். இதில், பேரூராட்சி செயலாளர் நஞ்சு சுப்ரமணி, ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணன், குமார் மற்றும் இளைஞரணி மாவட்ட துணை செயலாளர் விசு உட்பட பலர் பங்கேற்றனர்.