/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
போதை பொருள் பயன்பாடு எதிர்காலத்தை பாதிக்கும்: பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் அறிவுரை

ADDED : பிப் 14, 2025 09:50 PM

பந்தலுார்:
பந்தலுார் அருகே அம்பலமூலா பள்ளியில் போதை பொருள் பயன்பாட்டால், ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
பந்தலுார் அருகே அம்பலமூலா பகுதியில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உண்டு உறைவிட பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், பள்ளி தலைமை ஆசிரியர் செண்பகம் தலைமை வகித்தார். டாக்டர் ஜெயபிரகாஷ் பங்கேற்று பேசுகையில், ''தற்போது சமுதாயத்தில் பெரும்பாலானோர் போதை பழக்கங்களுக்கு அடிமையாகி உள்ளனர். இதனால், அவர்களின் உடல் நலம் பாதிக்கப்படுவதுடன், குடும்பமும் பாதிக்கப்படும். எனவே, போதை பழக்கங்களை அனைவரும் கைவிட வேண்டும்.
அதற்கு மாணவர்கள் முன்னுதாரணமாக இருந்து, இந்த சமூகத்தை காப்பாற்ற பொறுப்பு மிக்கவர்களாகவும் உருவாக வேண்டும்,'' என்றார்.
தொடர்ந்து அனைவரும் உறுதிமொழி எடுத்து கொண்டனர். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்கள் பங்கேற்றனர்.