/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
போலி தர முத்திரை பொருட்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுரை
/
போலி தர முத்திரை பொருட்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுரை
போலி தர முத்திரை பொருட்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுரை
போலி தர முத்திரை பொருட்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுரை
ADDED : அக் 14, 2025 12:38 AM
குன்னுார்:'தரமான பொருட்களை வாங்கி தரம் உயர்ந்த மனிதர்களாக வாழ வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டது.
குன்னுார் அருகே அதிகரட்டி அரசு மேல்நிலை பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் கூட்டம் நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் ஷெராபின் அனிதா தலைமை வகித்தார். மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் தியாகராஜன் வரவேற்றார்.
கருத்தாளராக பங்கேற்ற மனோகரன் பேசுகையில்,''மக்கள் பொருட்கள் அதிகம் வாங்கி குவிக்கும் மாறிவரும் சூழலில் சந்தைகளும் அதிகரித்துள்ளன. பொருட்களின் தரம் பற்றிய விழிப்புணர்வு இல்லை. தரமற்ற பொருட்களை வாங்கும், நுகர்வோர் உயிரிழப்பு, நோய், பொருள் இழப்பு, ஏமாற்றம் என பல வகைகளிலும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
வேளாண் உற்பத்தி பொருட்கள், பயிறு, எண்ணெய் வகைகள் உட்பட பல பொருட்களுக்கு 'அக்மார்க்' முத்திரை வழங்கி தரம் உறுதி செய்யப்படுகிறது. குழந்தைகள் உணவுகள், மின்சாதனங்கள் போன்றவைகளுக்கும் தர முத்திரை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், போலி முத்திரை இடப்படும் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதால், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பொருட்கள் வாங்குவதில் விழிப்புணர்வுடைய நுகர்வோராக இருந்து, தரமான பொருட்களை வாங்கி தரமுயர்ந்த மனிதர்களாக வாழ வேண்டும்,'' என்றார். அதில், தரமான முத்திரைகள் குறித்த விளக்க படங்களுடன் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.