/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கோத்தகிரி அரசு மருத்துவமனையில் ரூ. 22 லட்சம் மதிப்பீட்டில் ரத்த வங்கி
/
கோத்தகிரி அரசு மருத்துவமனையில் ரூ. 22 லட்சம் மதிப்பீட்டில் ரத்த வங்கி
கோத்தகிரி அரசு மருத்துவமனையில் ரூ. 22 லட்சம் மதிப்பீட்டில் ரத்த வங்கி
கோத்தகிரி அரசு மருத்துவமனையில் ரூ. 22 லட்சம் மதிப்பீட்டில் ரத்த வங்கி
ADDED : அக் 14, 2025 12:37 AM
கோத்தகிரி:கோத்தகிரி அரசு மருத்துவமனையில், 22 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ரத்த வங்கி திறக்கப்பட்டது.
கோத்தகிரி அரசு மருத்துவமனை சமீபத்தில், நவீனமாக்கப்பட்டு சிறந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மருத்துவமனையில், அவசர தேவைக்காக ரத்த வங்கி இல்லாமல் இருந்தது. இதனால், பிற பகுதிகளில் இருந்து ரத்தம் பெறவேண்டிய நிலை இருந்தது.
மக்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு இணங்க, சுகாதாரத்துறை சார்பில், 22 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, நவீன வசதிகளுடன் ரத்த வங்கி திறக்கப்பட்டது.
அரசு தலைமை கொறடா ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., ரத்த வங்கியை திறந்து வைத்து பேசுகையில்,''கோத்தகிரி அரசு மருத்துவமனையில் 'டயாலிஸ்' மையம் இல்லாததால் நோயாளிகள் சிகிச்சைக்காக ஊட்டி அல்லது குன்னுார் செல்ல வேண்டிய நிலை இருந்தது. இங்கு, 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டட அனுமதி கிடைக்கப்பெறும் பட்சத்தில், ஆறு மாதத்திற்குள் டயாலிஸ் மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது, 22 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திறக்கப்பட்டுள்ள ரத்த வங்கி வாயிலாக, நோயாளிகள் பயன் பெறுவர்,'' என்றார்.
நிகழ்ச்சிக்கு, மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் ராஜசேகரன் தலைமை வகித்தார். மருத்துவமனை தலைமை மருத்துவர் சிவகுமார் உட்பட, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பங்கேற்றனர்.