/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஓட்டுச்சாவடிகளில் வசதி அலுவலர்களுக்கு அறிவுரை
/
ஓட்டுச்சாவடிகளில் வசதி அலுவலர்களுக்கு அறிவுரை
ADDED : பிப் 22, 2024 11:25 PM

சூலுார்:சூலுார் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ஓட்டுச்சாவடிகளில் உள்ள வசதிகள் குறித்து, உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி ஆய்வு செய்தார்.
லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில், தேர்தல் பிரிவு அதிகாரிகள், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் ஓட்டளிப்பது, இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஓட்டு சாவடிகளில் உள்ள வசதிகள் குறித்து ஆய்வு செய்ய கலெக்டர் உத்தரவிட்டிருந்தார். உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியான, நகர்புற நிலவரி உதவி திட்ட கமிஷனர் இளவரசி, சூலுார் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ஓட்டுச்சாவடிகளில் உள்ள வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். தேவையான வசதிகள் குறித்து பட்டியலிட்டு, அவற்றை உடனடியாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மின்சாரம், குடிநீர், மாற்றுத்திறனாளி களுக்கான சாய்வு தளம் ஆகியவை இல்லாத ஓட்டுச்சாவடிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகளுடன் இணைந்து அந்த வசதிகளை விரைந்து ஏற்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும், என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.